ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு!!!

 ராமநாதபுரம் மாவட்டம்,  மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு!!!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கையான வேளாண் துறை portal லில் வருவாய் துறை சார்ந்த நிலம் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் கிரைன்ஸ் எனும் வலைதளத்தில் விஏஓக்கள் பதிவு செய்வதில்லை என்றும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய வலைதளத்தை அரசு நிர்வாகம் உருவாக்கித் தந்தால் அதில் பதிவுகளை பதிவேற்றம் செய்வோம், என வலியுறுத்தி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட சங்கத்தினர் மாவட்டத் தலைவர் நம்பு ராஜேஷ் தலைமையில் மனு அளித்தனர்.இதில் மாவட்டச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்மாநில அமைப்பு செயலாளர் அசோக் குமார் உள்ளிட்ட மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.     

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி