முத்துராமலிங்க சேதுபதியின் 263வது பிறந்தநாள்

 முத்துராமலிங்க சேதுபதியின் 263வது பிறந்த நாள்

ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாககத்தின் அருகில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 263வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு ராமநாதபுரம் எம்பி கே. நவாஸ் கனி,கூடுதல் ஆட்சியர்  (வளர்ச்சி) கே.ஜே பிரவீன் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ராஜசேகரன்,ராமநாதபுரம் ராஜாநாகேந்திர சேதுபதி, பாளையம்பட்டி அஸ்வின் ராஜா,பிஜேபி மாநில இளைஞர் அணி செயலாளர் ஆத்மா கார்த்தி,மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க ரகுநாத சேதுபதி மக்கள் நல சங்கம் மாநிலச் செயலாளர் ராஜேந்திரன்,பொருளாளர் ஜே. பிரசாந்த்,துணைத் தலைவர் டி. ராஜசேகர்,தமிழ்நாடு மறவர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் எம் செல்வராஜ்,ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் நல இயக்கம் மாநில பொதுச் செயலாளர் கோபால், மாநிலத்தலைவர் சுப்பிரமணியசாமி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாலையில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 263 வது பிறந்த நாளை முன்னிட்டு, மன்னர் ராமநாதபுரம் சேதுபதி நினைவு  அரங்கத்தில் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமையில் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக ராணி லெக்குமி நாச்சியார் கலந்துகொண்டு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.இதில் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள்,மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.       

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி