ஒழுங்கீனமான மாணவர்கள் யார் காரணம்.....? பள்ளிக்கல்வித்துறை சிந்திக்குமா...??

 ஒழுங்கீனமான மாணவர்கள் யார் காரணம்.....? பள்ளிக்கல்வித்துறை சிந்திக்குமா...??

🤦‍♂️அண்மைக்காலமாக தமிழக பள்ளிகளில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ❌கல்வித்தரம் மட்டும் அல்லாமல் 🤦‍♂️ஒழுக்கமும் கேள்வி ? குறியாகி உள்ளதற்கு காரணம் ஆசிரியர் பணியை சரிவர செய்ய இயலாத, ஒன்றுக்கும் உதவாத, சில புள்ளிவிவரக் கணக்கெடுப்புகள், ஆசிரியரின் கை கட்டுப்பட்டு , வருங்கால குற்றவாளிகளின் கை கட்டவிழ்த்து விடுவதற்கு சாட்சியாக தமிழகத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்த - வகுப்பறையில் ஆசிரியைக்கு கத்தி குத்து, வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் உபயோகம், வகுப்பறையில் ஆசிரியரின் நேருக்கு நேரே மாணவன் நின்று தகாத வார்த்தைகளால் ஆசிரியரை திட்டுவது, பள்ளி சீருடையில் மாணவ / மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் என சமூக ஊடகங்களில் நாளுக்கு நாள் அரங்கேற்றினாலும் , இது குறித்த எந்த ஒரு பொறுப்பான நடவடிக்கையையும் தமிழக கல்வித்துறை எடுத்ததாக தெரியவில்லை... 

தமிழகத்தில் கல்வியின் புள்ளி விவரங்களை காட்டி மார்தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களுக்கும் எங்கே புரியப் போகிறது கையாலாகாத ஆசிரியப் பணியின் வேதனை...?

ஆம்!

✨ கடந்த ஓரிரு தினங்களில், திருச்சி மாவட்டத்தில் வகுப்பு தகராறில் ஒரு மாணவன் கொலை செய்யப்படுகிறார். அதில் சக மாணவர்கள் 3பேரை கைது செய்ததோடு, 2 ஆசிரியர்கள், 1 தலைமையாசிரியை யும் இவ்வழக்கின் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

✨மற்றொரு மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வருகிறான். அதைக் கண்டித்து, அம்மாணவனை பெற்றோரை அழைத்து வர சொல்ல - அம்மாணவனோ மாமாவை கூட்டி வந்து, மாணவனும் , மாமாவும் ஆசிரியரிடம் உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா? தலைக்கவசம் நீங்கள் வைத்துள்ளீர்களா...? என கேள்வி கேட்கும் காணொளியும்,

அங்காணொளியில் -

மாணவன் கூறும் 

2 வார்த்தைகளை

கவனிக்க வேண்டுகிறேன்.

 *1. வாத்தியார் னா* 

 *பாடம் நடத்துற வேலைய* *மட்டும் பாரு....* *அதைவிட்டு டு* *ஒழுக்கத்தை லாம் எங்களுக்கு* *சொல்லிகுடுத்துட்டு* *இருக்காத..."* 

 *2.எனக்குலாம் "Exam" யே* *தேவையில்லை...* 

    👆இது தான் இன்றைய தமிழகத்தின் பல பள்ளிகளின் சூழல்...

❌மாணவன் / மாணவி *தன் கண்முன்னே* *நடக்கும் தவறைக் கூட* தட்டிக்கேட்க முடியாத கையாலாகாத பணி இன்றைய ஆசிரியர்கள் பணி...

ஊருக்கு நாலு பேர் இருக்கானுங்க...

தவறு செய்த மாணவனை / மாணவியை

அப்பா , அம்மா வ

கூட்டிடு வானா

"மாமா, சித்தப்பா, அண்ணன்" னு

பள்ளியில வந்து

மாணவ / மாணவியின்

தவறை ஊக்குவிப்பதோடு,

ஆசிரியரை அவமரியாதையோடு பேசும் *மரியாதை இல்லாத பணி* இன்றைய ஆசிரியர்கள் பணி...

🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

 *❌எங்கே போய்க்* *கொண்டிருக்கிறது?* *இன்றைய* *கல்வித்துறை...* 

🤣புள்ளிவிவரங்களை நோக்கி... புள்ளிவிவரங்களால் என்ன பயன்...?

❌நாளைய சமுதாயத்தின் பிம்பத்தை அங்கும், இங்கும் ஒவ்வொன்றாக முளைத்து  பிரதிபலித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்.....?

❌கட்டுப்பாட்டுடன் படிக்க வேண்டிய குழந்தைக்கு 

 *அளவில்லாத சுதந்திரம்* 

✅சுதந்திரமாக கற்பிக்க

வேண்டிய ஆசிரியருக்கு

 *அளவில்லாத* *கட்டுப்பாடுகள்* 

❌மாணவனை அடிக்காதீர்கள்! திட்டாதீர்கள்!! மனம் புண்படும் படி பேசாதீர்கள்!!! உடலாளோ, உள்ளத்திலோ எந்த ஒரு பாதிப்பும் மாணவருக்கு ஏற்படுத்தாதீர்கள்...! - *ஆனால், தேர்ச்சி 100சதவீதம் கொடுத்துவிடுங்கள்...* டாக்.அப்துல்கலாம் கண்ட கனவு இந்தியாவை உருவாக்கி விடுங்கள் 🤦‍♂️👍.

மாணவன் கத்தியால் குத்தினால் தாங்கி உயிர் விடுங்கள் - *ஏனென்றால் ஆசிரியர் பணி தியாகப்பணி👍* 

மாணவன் கடுஞ்சொல் பேசினால் தாங்கி கொள்ளுங்கள் - ஏனென்றால் *ஆசிரியர் பணி சகிப்புத்தன்மை நிறைந்த பணி...* 

மாணவன் பள்ளிக்கு வரவில்லையென்றால் வீட்டிலேயே சென்று கூட்டி வாருங்கள் - ஏனென்றால் *ஆசிரியர் பணி அளவிட முடியாத பணி...* 

மாணவன் வகுப்பறையில் என்ன செய்தாலும் உங்கள் கண்ணையும், கையையும் கட்டிக்கொண்டு போங்க... ஏனென்றால் - *கடமையே கண் கண்ட தெய்வம் என்பது* ஆசிரியர் பணிக்கு மட்டும் பொருந்தாது...

இறுதியாக, மாணவன் தேர்வில் ஒன்றும் எழுதவில்லை என்றாலும் தேர்ச்சி மதிப்பெண் கொடுத்து PASS போடுங்கள் - ஏனென்றால், நாளை அவன் தான் *எங்களைப்* *போன்ற* *அரசியல்வாதியாக* *தமிழகத்தை* *ஆளப்போகிறவன்* 🤦‍♂️🤣

✨ *ஆசிரிய சங்கங்கள், ஜேக்டோ-ஜியோ* அமைப்புகள் தங்களின் வாழ்வாதார உரிமைகளை மட்டும் மீட்க போராடுவதை விடுத்து, பணிப்பாதுகாப்பு, கற்றலில் சுதந்திரம் போன்றவற்றையும் மீட்க முன்னெடுத்துச் செல்லலாம். ஏனெனில், *வாழ்வாதார உரிமையை விட சுயமரியாதையோடு* ஒரு அரசுப்பணியாளன் தனது அறப்பணியை செவ்வனே செய்திட வேண்டியது இன்றியமையாதது.

🤣உலகிற்கே முன் உதாரணமாக ஆட்சியை வழங்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே, தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் வித்யாசம் தெரியாமல் பள்ளிக்கல்வித்துறையை *புள்ளிவிவரத்துறையாக* மாற்றிய ஆட்சியாளர்களே... 

"ஒரு எதிர்கால சமுதாயம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது" - என்பதை மறந்துவிடாதீர்கள்...

 *🤦‍♂️புள்ளிவிவரத்தையும்,* *🔴Red, 🟡Yellow,🟢Green என்ற* *மடிக்கணினியை* நோக்கி ஓடுவதை விடுத்து, *மாணவனின் மனதை நோக்கி* ஓட ஆசிரியருக்கு வாய்ப்பு தாருங்கள்...!!!

 *அரசுப்பள்ளியில் பணிபுரியும்* 

 *ஒரு "கனவு ஆசிரியன் 🙏🏻"*