கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கியின் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
மார்ச் 08 - உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கே.ஆர்.பி.அணை பகுதியில் அமைந்துள்ள சேவை நிறுவனமான இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மரக்கன்று நடும் நிகழ்வும் அதனை தொடர்ந்து மாபெரும்
விழிப்புணர்வு பேரணியும், பெண் தொழில்முனைவோரின் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பிறைசூடன் முன்னிலை வகித்தார். பெண் காவலர் அர்ச்சனா தலைமை தாங்கினார். மேலும் பயிற்சி நிறுவனத்தின் பெண் தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.
Moorthy Reporter