இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இயற்கை புதையல்..! விலை குறையும் மின்சார வாகனங்கள்....!!

 இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய இயற்கை புதையல்..! விலை குறையும் மின்சார வாகனங்கள்....!!

5.9 மில்லியன் டன் லித்தியம் உள்பட மிகப்பெரிய புதையல் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. லித்தியம் மட்டுமின்றி இரும்பு அல்லாத உலகம், தங்கம் உள்பட 51 வகையான உலோகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பதில் லித்தியம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது 5.9 மில்லியன் லித்தியம் கிடைத்துள்ளதாக கூறியிருப்பது உண்மையாகவே இயற்கை இந்தியாவுக்கு கொடுத்த மிகப்பெரிய புதையல் இது என்று கூறப்படுகிறது.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரியாஸ் என்ற மாவட்டத்தில் உள்ள சலால் ஹைமானா என்ற பகுதியில் தான் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. லித்தியம் மட்டுமின்றி தங்கம் உள்பட 51 கனிமங்கள் இந்தியாவில் பல பகுதியில் கிடைத்துள்ளதாகவும் அவை அந்தந்த மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லிதியம், தங்கம் மற்றும் பொட்டாசியம் பொட்டாஷ், மாலிப்டினம் ஆகிய அடிப்படை உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இவை ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா ஆகிய 11 மாநிலங்களில் கிடைத்துள்ளதாகவும் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான இயற்கை வளங்கள் கிடைத்துள்ளதாகவும் 7897 மில்லியன் டன் கொண்ட நிலக்கரி மற்றும் லிக்னைட்டின் 17 இருப்புகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

1851 ஆம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நிலையில் இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்து வருகிறது என்பதும் இதனால் புவி அறிவியல் தகவல்களின் களஞ்சியமாக இந்த அமைப்பு வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச புகழ்பெற்ற புவியியல் அமைப்பின் இயற்கை வளங்களின் கண்டுபிடிப்பு நாட்டை மிகப்பெரிய லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களின் உற்பத்தி செலவு வெகுவாக குறைய உள்ளதால் இதன் விற்பனை விலையும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்