எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம்...! அதிர்ச்சியில் ஆளும் கட்சி தரப்பினர்....!!

 எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம்...!   அதிர்ச்சியில் ஆளும் கட்சி  தரப்பினர்....!!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்மகன் உசேன் அனுப்பிய ஒப்புதல் படிவத்தில் பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலர் என குறிப்பிடவில்லை. இரட்டை இலை ஒதுக்கீடு செய்ய தேவையான ஏ,பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவைத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை அங்கீகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றவரை அதிகாரபூர்வ வேட்பாளராக பொதுக்குழு அங்கீகரிக்கிறது. அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் தென்னரசு என்பதை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரியப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம்  அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளரை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக வேட்பாளராக தென்னரசு நிற்பார் என்றும்ட, அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், அது தொடர்பான கடிதத்தையும் அனுப்பினார். இந்த ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற உள்ளார்.

இது நாள் வரை அனைத்து ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் மக்களை குழப்பி வந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.

 இந்த தேர்தலில் ஆரம்பத்தில் 1008 குழப்பங்கள் இருந்தாலும் வேட்புமனு தாக்களுக்கு முன்பாகவும் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு முன்பாகவும் இதில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

 ஏற்கனவே நாம் சொன்ன படியே எடப்பாடி அணி தான் உண்மையான அதிமுகவாக அங்கீகரிக்கப்படும் தென்னரசுக்கு தான் இரட்டை இலை கிடைக்கும் பிஜேபியும் ஓபிஎஸ் ம் எடப்பாடி தலைமையிலான அணியை ஆதரிக்கும். இன்றைக்கு கொண்டாட்டத்தில் இருக்கிற அனைவரும் பின்னாளில் திண்டாட வேண்டி வரும் என்று நாம் சொன்ன படியே அரசியல் களம் மாறி இருக்கிறது.

 இப்போதுள்ள சூழ்நிலையில் எப்போதுமே ஆளும் கட்சி தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்கிற நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இதற்கு வருங்காலம் பதில் சொல்லும்..,!!