ஒசூரில் பேரறிஞர் அண்ணாசிலைக்கு மாநகர மேயர் மாலை அணிவித்து மரியாதை

 ஒசூரில்  பேரறிஞர் அண்ணாசிலைக்கு    மாநகர மேயர்  மாலை அணிவித்து மரியாதை.

ஒசூரில் உள்ள பேரறிஞர் அண்ணாசிலைக்கு அவரின் 54வது நினைவு தினத்தையொட்டி ஒசூர் மாநகர திமுக சார்பில் மாநகர மேயர்  மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தாலூகா அலுவலக சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஓசூர் மாநகர திமுக சார்பில் வணக்கத்திற்குரிய மேயர் எஸ்ஏ.சத்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாவட்டத் துணைச் செயலாளர் முருகன்Ex.MLA, மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், ஓசூர் மாநகர நிர்வாகிகள், ஒசூர் ஒன்றிய கழக செயலாளர் கஜேந்திரமூர்த்தி,  மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.