கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானகள்

 கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானகள் 

கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானகள் : யானைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 45க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகிறது. இதில் 20 காட்டு யானைகள் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நாகமங்கலம், நீலகிரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து விளை பயிர்களை சேதப்படுத்தியது. 

காலை நேரத்தில் கிராம பகுதிகளில் யானைகள் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் நாகமங்கலம் உத்தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்திற்குள் முகாமிட்டது.

தற்போது அந்த இடத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர்  கண்காணித்து வருகின்றனர். மாலை நேரத்தில் யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

B S. Prakash 

.