பக்கீரப்பா PSP கடற்கரை பூங்காவின் பொங்கல் விழா!!!

 பக்கீரப்பா PSP கடற்கரை பூங்காவின் பொங்கல் விழா!!! 

ராமநாதபுரம் மாவட்டம்,

ராமநாதபுரம் அருகில் உள்ள பக்கீரப்பா PSP கடற்கரை பூங்காவின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 15.1.23 முதல் 17.1.23 வரை மூன்று நாட்கள் இடைவிடாத பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 15.1.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மேல் மேத்தீஸ் இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் 16.1.20 23 அன்று மாலை 6:30 மணிக்கு மேல் உலக புகழ் பெற்ற மதுரை வெங்கடேஷ் ஐபிஎம் (USA) மேஜிக் ஷோ நிகழ்ச்சியும்,17 அன்று மாலை 4:30 மணிக்கு மேல் பல போட்டிகள் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து பரிசுகளை வென்று செல்லலாம். இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவ மாணவிகளுக்கும், சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கண்டு மகிழ நுழைவாயிலில் உள்ளே அழகிய கண்ணைக் கவரும் பல வண்ண குருவிகள் அடங்கிய கூடமும்  இதனை அடுத்து உயிருடன் உள்ளதைப் போல டைனோசர், குழந்தைகள் விளையாடி மகிழ அழகான யானை, பறவைகள் கூடம்,பிள்ளைகள் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், அனைத்து விதமான உணவு வகைகள்,குடும்பத்துடன் கண்டு மகிழ திறந்த வெளி சிறிய திரையரங்கு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பார்த்து மகிழ்ந்திட ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பொழுதுபோக்கு பூங்கா PSPகடற்கரை பூங்கா, காஞ்சிரங்குடி அருகிலுள்ள

பக்கீரப்பா தர்ஹா PSP.கடற்கரை பொழுதுபோக்குகடற்பூங்கா.இங்கே ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்தில் 15,16, 17 ஆம் தேதிகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழ தக்க அளவில் மிக பிரமாண்டமான முறையில் கடற்கரை மணல் பரப்பில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கி தந்திருப்பவர்கள்       PSP கடற்கரை பூங்கா நிர்வாகத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி