அறிவாளி தயாநிதியின் அற்ப செயல்....!

 அறிவாளி தயாநிதியின் அற்ப செயல்....!

கடந்த டிச.10ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அவசரகால கதவு திறக்கப்பட்டதன் காரணமாக, அவசரகால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் மீண்டும் சரிபார்க்கப்பட்டு பின்னர் விமான புறப்பட்டது.

இந்த செயலில் ஈடுபட்டவர் கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து தேசிய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இண்டிகோ விமானத்தின் அவசர வழிக்கதவு திறக்கப்பட்ட விவகாரம் பற்றி விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து ஜோதிராத்திய சிந்தியா கூறுகையில், விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார் என்று கூறினார். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விமானத்தின் அவசர வழிக் கதவை திறக்க வேண்டிய தேவை தேஜஸ்வி சூர்யாவுக்கு இல்லை. அவர் நன்கு படித்தவர்.

அந்த கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதனை பார்த்து தேஜஸ்வி தான் விமானக் குழுவினர் கூறினார். நானும் இடைவெளி இருப்பதை பார்த்தேன். இதையடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. அதேபோல் தவறு செய்ததாக தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மீது தவறு இல்லாத போது, எம்பி என்ற ஒரு பொறுப்பில் இருப்பதால் அவர் மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்தார். 

அண்ணாமலையின் பேட்டி மூலம் மீண்டும் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இண்டிகோ விமானத்தில் அவசர வழிக் கதவு அருகே அமர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வணக்கம், வாழ்க தமிழ்நாடு. இன்று கோவைக்கு இண்டிகோ விமானம் வாயிலாக பயணம் செய்கிறேன். எனக்கு கிடைத்த இருக்கை அவசர வழிக் கதவிற்கு பக்கத்தில் உள்ளது. ஆயினும் நான் அவசர வழிக் கதவை திறக்கப் போவதில்லை.

ஏனென்றால் நான் அதனை திறந்தால், மன்னிப்பு கடிதம் எழுத வேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவசர வழிக் கதவை திறப்பதால் பயணிகளுக்கும் ஆபத்து. அதேபோல் சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள். இதை திறக்காமல் இருப்பதால், பயணிகள் அனைவருக்கும் 2 மணி நேரம் மிச்சமாகும். இதனை அனைவரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன், நன்றி என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. தயாநிதியின் இந்த அற்பத்தனமான பேச்சு பலரும் கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.

   அர்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ஜாமத்தில் குடை பிடிப்பான் என்கிற பழமொழிக்கு ஏற்ப கட்சியில் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ஜன்னலோரமாக ஒரு சீட்டை பிடித்து வீடியோ வெளியிட்டு தன்னை ஒரு அறிவாளியாக காட்டிக் கொள்ள தயாநிதி முயற்சித்துள்ளார். எதற்கு இந்த அற்பத்தனமான  அரசியல் நாடகம் என்று அவரை ஈனச் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.