ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் 74வது குடியரசு தினத்தையொட்டி மாநகர மேயர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.. 

ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களின் பேச்சுப்போட்டி,நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன.

ஒசூர் மாநகராட்சியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேயர் சத்யா அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார், அதனைதொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணி மேற்க்கொண்ட அரசு ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan