ஓ பி.எஸ்.ஐ ஓரம் கட்டும் பா.ஜ.க.....! ஏகப்பட்ட குஷியில் எடப்பாடி பழனிச்சாமி.,!!

ஓ பி.எஸ்.ஐ ஓரம் கட்டும் பா.ஜ.க.....! ஏகப்பட்ட குஷியில் எடப்பாடி பழனிச்சாமி.,!!

 ஜி 20 மாநாட்டு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தன்னை பாஜக தலைமை கைவிட்டு விட்டதோ என ஓபிஎஸ் அதிருப்தியில் இருக்கிறார். இது தொடர்பாக டெல்லி தரப்பை தொடர்பு கொண்டு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தற்போது இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்கனவே தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஆறு மதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த மோதல் போக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் விசாரணை என இடையில் இரு தரப்புக்கும் ஆறுதல் அளிக்கும் சில விஷயங்கள் நடைபெற்றாலும் அது அத்தோடு முடிவடைந்து விடாது

அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் அடுத்த கட்டங்களை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி ஓபிஎஸ் இணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்பியது. மேலும் அவர்களுடன் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் சேர்ந்தால் அதிமுகவுக்கு கூடுதல் வலிமை கிடைக்கும் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு கௌரவமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என பாஜக தலைமை கருதியது. 

இருமுறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்தியா முழுவதும் பெரிய அளவில் பாஜக வெற்றி பெற்றாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் ஒன்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற வேண்டுமானால் எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் நான்கு அணிகளாக இல்லாமல் ஒன்றாக சேர வேண்டும் இல்லையேல் கூட்டணியாவது சேர்த்து தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டது. இது குறித்து கட்சியின் தேசிய தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் வரை அதிமுக இணைய வேண்டும் எனக் கூறி வருகின்றார்.

 ஆனால் யாரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவே முடியாது என விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி. 

அதிமுகவை பொறுத்தவரை தான் தலைமை மற்றவர்களுக்கு இடமில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

இதுகுறித்து பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரை பகைத்துக் கொள்ள பாஜக தலைமை விரும்பவில்லை காரணம் 90 சதவீத எம்எல்ஏக்கள் ஆதரவு 95% மாவட்ட செயலாளர்கள் ஆதரவு 100 சதவீத தொண்டர்கள் ஆதரவு என அதிமுகவின் தற்போதைய அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை பகைத்துக் கொள்ள விரும்பாத பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

 இதை உறுதி செய்யும் வகையிலேயே கடந்த சில நாட்களாக சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள இடைக்கால பொதுச் செயலாளர் என அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காத நிலையில் டெல்லி தலைமையை தொடர்பு கொள்ள ஓபிஎஸ் முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகன் ஒபி ரவீந்திரநாத் தனக்கு நெருங்கமான டெல்லி வட்டாரங்கள் மூலம் எவ்வளவோ முயற்சித்தும் சந்திப்புக்கு டெல்லி தலைமை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு நேரடியாக பிரதமர் அல்லது அமித்ஷாவை சந்திக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை என்கின்றனர் தேனிதரப்பினர். இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.