தாயின் உடலை தோளில் சுமந்த பிரதமர் மோடி....!பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல் அமைதியாக நடந்த இறுதி சடங்கு....!!

தாயின் உடலை தோளில் சுமந்த பிரதமர் மோடி....!பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல் அமைதியாக நடந்த இறுதி சடங்கு....!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.

தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார். அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார்.

ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீரப்பெண் மோடியின் உடல் இன்று காலை 9.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் போது பிரதமர் மோடி கண்ணீருடன் காணப்பட்டார்

இன்று பிரதமர் மோடி காரில் தாயார் ஹீராபென் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது எப்போதும் பின்பற்றப்படும் ப்ரோடோகால் முறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுவாக பிரதமர் மோடி ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரை சுற்றி எஸ்பிஜி அதிகாரிகள் இருப்பார்கள். அதோடு closed contact பாதுகாப்பு குழு ஒன்றும் இருக்கும். இவர்கள் மட்டுமே மோடியை நெருங்க முடியும். மற்ற யாரும் மோடியை நெருங்க முடியாது. மோடியை சந்திக்கும் பெரிய தலைவர்கள் மட்டுமே பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இன்று அப்படி ப்ரோடோகால் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஏனென்றால் பிரதமரின் தூரத்து உறவினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொது மக்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதேபோல் பிரதமர் மோடிக்கு அருகில் பலர் இன்று நின்றனர். பொதுமக்கள் பலரும் கூட இறுதிச்சடங்கின் போது பிரதமர் மோடிக்கு அருகில் நின்றனர். சிலர் செல்பி எடுக்க கூட முயன்றனர். ஆனால் இதற்கு எஸ்பிஜி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு என்ற எஸ்பிஜி அதிகாரிகள் சில பிளான்களை வைத்து இருப்பார்கள். அதை பின்பற்றி இன்று பிரதமர் மோடிக்கு நெருக்கமாக நின்று பாதுகாப்பு வழங்கினார்கள்.

இன்று முதலில் ஆம்புலன்சில் தனது தாயாரின் உடலனுடன் பிரதமர் மோடி தனியாகவே சென்றார். அதன்பின்தான் எஸ்பிஜி அதிகாரிகள் சில மீட்டர்களுக்கு பின் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறினார்கள். முதலில் பிரதமர் மோடி ஆம்புலன்சில் தனியாக செல்வதாகவே இருந்தது. எஸ்பிஜி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் பின் பக்கம் தொற்றிக்கொள்வதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி கடைசியில் அதிகாரிகள் உள்ளே அமர்ந்து கொண்டனர். இந்த பயணம் முழுக்க மோடி கைகூப்பி வணங்கியபடி காணப்பட்டார். தனது தாயாரை கை கூப்பி வணங்கியபடி மோடி இருந்தார்.

அதேபோல் வெளியே இருந்த மக்களும் இந்த வாகனத்தை வணங்கியபடி இருந்தனர். ஆம்புலன்சில் இருந்து இறங்கி தகன மேடைக்கு பிரதமர் மோடி தனது தாயாரின் உடலை சுமந்து சென்றார். அவரின் உயரம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் அவரின் பக்கம் தாயாரின் உடல் சாய்ந்து இருந்தது. பிரதமர் மோடி தாயாரை தூக்கி செல்கையில், வழியில் பொதுமக்கள் பலர் வரிசையாக நின்றனர். பொது மக்கள் நின்றபடி அவருக்கு மரியாதையை செய்து, இறந்த ஹீராபென் உடலை பார்த்து வணக்கம் வைத்தனர்.

பிரதமர் மோடி தாயாரின் உடலுக்கு அதன்பின் தகன மேடையால் இறுதி மரியாதையை செய்தார். கடைசியாக உடலை சுற்றி வந்தார். அப்போது பிரதமர் மோடி உடைந்து கண்ணீர்விட்டார். இதையடுத்து ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

என் தாய் எந்த அரசு பொறுப்பையும் வகித்ததில்லை. எந்த விதமான அரசு மரியாதையையும் எனது தாயாருக்கு செய்ய கூடாது.அரசாங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டிய மரியாதையை எனது குடும்பத்துக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை."

 அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு.

 எந்த விஐபி வருகைக்காவும் காத்து இருக்கவில்லை.

 பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல்..

உங்கள் பிராத்தனைகளில் அவரை நினைத்து கொண்டு ,உங்கள் அன்றாட பணிகளை தொடருங்கள் "*

 என்று நாட்டின் பிதாமகனின் தாயாரின் இறுதி சடங்கு வெரும் ஒரு 10 /15 பேரை கொண்டு நடக்கிறது...

*மீண்டும் தான் ஒரு நாட்டின் சாதாரண சேவகன் என்று நிரூபித்துள்ளார் மோடி என்ற மகான்* 

*எப்பேற்பட்ட மாவீரனை,கர்ம யோகியை இந்த பூமிப்பந்திற்கு வழங்கிய தாய்!!*

*அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்..*


Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்