அஞ்செட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த விவசாயி கைது

 அஞ்செட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த விவசாயி கைது

 கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள நூரொந்து சுவாமி மலை கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு விற்பனை செய்யப்படுவதாக அஞ்செட்டி காவல் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் பேரில் அஞ்செட்டி போலீசார் நூரொந்த, சுவாமிமலை கிராமத்திற்கு சென்று  விவசாய நிலத்தில் ரகசிய சோதனை மேற்கொண்டனர் .அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மது வயது 34 தந்தை பெயர் பாண்டு என்பவர் தன் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விவசாய நிலத்தில் விளை பயிர்களுக்கு நடுவில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது உடனே கஞ்சா செடிகள் விற்பனை செய்து வந்த மது என்பவரை கைது செய்து அவரிடமிருந்த  1 கிலோ கஞ்சா செடிகளை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

  போலீசார் கூறுகையில்

அஞ்செட்டி பகுதியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதும் விற்பனை செய்வதும் பெரும் குற்றம் .அப்படி செய்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதும் விற்பதும் பற்றி தகவல் தெரிந்தால் அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் இப்பகுதி மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

B. S. Prakash 

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்