வனத்துறை சார்பில் தளி மற்றும் ஜவளகிரியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வனத்துறை சார்பில் தளி மற்றும் ஜவளகிரியில்  விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஜவளகிரி வனத்துறை சார்பில் தளி மற்றும் ஜவளகிரியில் நேற்று மாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன் துவக்கி வைத்தார். தர்மபுரியை சேர்ந்த பாரதி கிராமிய கலை வளர்ச்சி மைய குழுவினர் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும். வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும். உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பயன்படுத்தினால் ஒப்படைக்க வேண்டும். பட்டா நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது என கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.