திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்புல்லாணி அஇ அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. திருப்புல்லாணி பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் பெரிய பட்டணம் சிராஜுதீன், திருப்புல்லாணி ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் ஊராட்சிக் கழக செயலாளர் பாலு, இளைஞரணி செயலாளர் செல்வகுமார், சேது ராஜா, மேதலோடை தினகரன், ராஜா, பாஸ்கர சேது, ஆலங்குளம் குமாரவேலு, பள்ளபச்சேரி முருகன், முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் அரியப்பன், அகிலன், அறிவழகன், மற்றும் ஒன்றிய கழக நகரக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.         

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி