டிச.06 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் 'பாசிச எதிர்ப்பு தினம்' எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்!
*இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்! - 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!*
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதனடிப்படையில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சோமு, சுலைமான், மாவட்ட பொதுச்செயலாளர் ஜமீல்மாவட்ட செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன் பொருளாளர் ஹசன் அலி எஸ் டி டி யு மாவட்ட தலைவர் முஸ்தாக் அகமத், மருத்துவ அணி தலைவர் காதர் கனி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தவ்லத்தியா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் ரபிக் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் யாசின், வேந்தை சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் முருக பூபதி, பெரியார் பேரவை நாகேஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக இராமநாதபுரம் நகர் தலைவர் நவாஸ் கான் நன்றி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி