இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பேரணி

 இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு  பேரணி 

கிருஷ்ணகிரி. நவ.7 - 

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பெற்ற இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பேரணியில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் பங்கேற்று சிறப்பித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி , இந்தியா முழுவதும் "இந்திய ஒற்றுமை பயணம்" என்கிற பெயரில் நடைப் பயணம் மேற்க் கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தொடங்கிய இப் பயணம் கேரளா, கர்நாடகா,தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவடைந்துள்ளது..

இந் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது,

 கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ்  அப்துர் ரகுமான் தலைமையில் நடை பெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் மாநில செயலாளர் தேன்கு அன்வர், மாநில செயலாளர் வீர. முனிராஜ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் முரளிதரன், சீனிவாசன், காசிலிங்கம், ஜேசுதாஸ், தனபால்ராஜ், சபிபுல்லா, தாஸ்,  சேகர், ஹரிஸ்பாபு ,கீர்த்தி கனேஷ், மகாதேவன்,  செல்வம், சரோஜா உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கோட்டை வாசலில் தொடங்கிய இப் பேரணி பேருந்து நிலையம் முன்பு  நிறைவு பெற்றது.. அதைத் தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் முன்னிலையில்  இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தனர் . கட்சியில் இணைந்தவர்களுக்கு, தேன்கு, அன்வர் மற்றும் அப்துர் ரஹ்மான், பொன்னாடை போர்த்தி  வரவேற்றனர்.

B. S. Prakash