ஒசூர் அருகே கல்குவாரியை மூட வலியுறுத்தி வனப்பகுதியில் ஆதரவாக இரவு முழுவதும் தங்கிய எம்பி செல்லக்குமார் ..

 ஒசூர் அருகே கல்குவாரியை மூட வலியுறுத்தி வனப்பகுதியில்  ஆதரவாக இரவு முழுவதும்  தங்கிய எம்பி செல்லக்குமார் ..

ஒசூர் அருகே கல்குவாரியை மூட வலியுறுத்தி வனப்பகுதியில் போராடிவரும் கிராம மக்களுக்கு ஆதரவாக இரவு முழுவதும் அவர்களுடன் தங்கிய எம்பி செல்லக்குமார் ......

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொரட்ட கிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு ஆதரவாக வனப் பகுதியில் இரவு முழுவதும் அவர்களுடன் தங்கியுள்ளார் எம்பி செல்லக்குமார்......

ஒசூர் அடுத்த கொரட்ட கிரி கிராம பகுதியில் செயல் பட்டு கல்குவாரியால் வீடுகள் விரிசல்,மாசடைந்த புகைமண்டலம்,மாணவர்கள் கல்வி பாதிப்பு விவசாயிகள் நிலம் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் கடந்த நான்கு தினங்களாக கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் கிராமத்தை காலி செய்து தஞ்மடைந்துள்ளனர்

இந்த நிலையில் அவர்கள் ஆதரவாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இரவு முழுவதும் வனப்பகுதியிலேயே அவர்களுடன் தங்கி உள்ளார்......

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்......

கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் இதுவரை மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குவாரிகள் மூலமாக அரசுக்கு கட்டிய வரியை விட குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளது என தெரிவித்தார். குறிப்பிட்ட சில குவாரிகளில் ஆய்வு செய்ததில் சுமார் 300 கோடி அளவில் முறைகேடு நடத்தப்பட்டுள்ளது என்பது அரசு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரிகளையும் முறையாக ஆய்வு செய்தால் சுமார் 10,000 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவரும், இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் நம் மாவட்டத்து மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என்றார்.

மேலும் குவாரிகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது நியாமற்ற நிலையில் ஒரு சாராருக்கு ஆதரவாகவே உள்ளது தெரியவருகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து வந்து இந்த குவாரிகளில் என்ன முறைகேடு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும், இந்த ஆய்வின் மூலம் எவ்வளவு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது, இப்பகுதி மக்களின் வீடுகள் எந்த அளவில் சேதம் அடைந்துள்ளது, எவ்வளவு விவசாய பூமி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இப்பகுதி மக்களுக்கு தீர்வு கிடைக்குமே தவிர நான்கு சுவற்றுக்கு உள்ளே அமர்ந்து தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் தீர்வு கிடைக்காது என தெரிவித்தார்.

தமிழக அரசு தலையிட்டு எங்கள் பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பேட்டி:1. டாக்டர். செல்லக் குமார்- கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் 2. திருமதி.ஜெயமேரி- கொரட்ட கிரி.

B. S. Prakash