பர்கூர் அருகே அரசு பள்ளியில் மாணவன் மரணம்...! தொடரும் மர்மம்....!?
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் இவர் அருகே உள்ள கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளில்12ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று இருந்த பொழுது பிற்பகல் தனது வகுப்பறையில் பயின்று வரக்கூடிய சக மாணவன் தயானந்த் உடன் தலைவலி தைலம் பூசி கொள்வதில் எழுந்த வாக்குவாதத்தில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் கோபிநாத்தை சகமானவன் தயானந்த் கீழே தள்ளி விட்டதாகவும் இதில் காயமடைந்த கோபிநாத் வழிப்பு ஏற்பட்டு துடித்ததாகவும் கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ஆசிரியர் உதவியுடன் அருகில் உள்ள பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு இடையே இது போன்ற விரும்பத் தகாத மோதல்கள் ஆங்கே அங்கே நடைபெற்று வருவது வருத்தத்தை அளிக்கிறது தொடர்ந்து இத்தகைய செயல்கள் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.