ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தம் புனரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு...!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தம் புனரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு...!

வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதியில் ராயக்கோடடை அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும்,  ஓசூரில் இருந்து35 கிலோ மீட்டர் தொலைவிலும், மலைகள் சூழ்ந்த தேன்கனிக்கோட்டையில் இருந்து35 கிலோ மீட்டர் தொலைவிலும் பக்கத்து மாவட்டமான தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் மையஊராக விளங்கும் சூளகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அனைத்துசாலைகள் கூடக்கூடிய இடத்தில் ராயக்கோட்டை ஊர் அமைந்துள்ளது.

ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில் 2 கிலோ

மீட்டர் தொலைவில் சிவதூருவாசன் மலை அடிவாரத்தில் வஜ்ர நாதேஸ்வரர்

தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு சிவன் கோவில், வள்ளி&தெய்வானை சமேத

முருகன் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளன.

பக்தர்கள் நம்பிக்கை

மேலும் படிகலிங்கம், விநாயகர், சன்னதிகள் அமைந்துள்ளன. இத்துடன் நந்திவாயில் இருந்து தண்ணீர் கொட்ட கூடிய நீருற்றும் அமைந்துள்ளன. இந்த வஜ்ர

நாதேஸ்வர தீர்த்தத்தில் நீராடினால் நோய்நொடிகள், பீடை பிணிகள், தோல்

சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகுவதாக மக்கள் நம்புகிறார்கள்.

அதே போல அங்கு பக்தர்கள் நீராட தெப்ப குளமும் உள்ளது. இங்கு திருமணம்

செய்து கெகள்ளும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், குடும்ப

ஒற்றுமையுடன் இருக்கும் என்பதால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான

திருமணங்கள் நடைபெற கூடிய இடமாகவும் வஜ்ர நாதேஸ்வரர் தீர்த்தம்அமைந்துள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, வெளி மாவட்ட மக்களும் இங்கு

அதிகம் பேர் தினமும் வந்து செல்கிறார்கள். இந்த வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்த

கோவில் வளாகத்தை புதுப்பித்து பக்தர்கள் வருகையை அதிகப்படுத்திட வேண்டும்

என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் 

முனிரத்தினம் (தொழில் அதிபர், ராயக்கோட்டை):&

ராயக்கோட்டையில் உள்ள வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தம் இந்த மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வெளி மாவட்ட மக்களும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.

இங்கு வந்து நீராடினால் உடல் நோய்கள் நீங்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

இங்குள்ள கோவில் சன்னதிகள், கட்டிடங்கள் பழமையடைந்துள்ளன. அவற்றை

புனரமைக்க வேண்டும். அவ்வாறு புனரமைக்கும் பட்சத்தில் வரக்கூடிய

பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

ஸ்ரீதரணிராஜன், சமூக ஆர்வலர், ராயக்கோட்டை:&

ராயக்கோட்டை வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்ததிற்கு தினமும் நூற்றுக்கணக்கான

பக்தர்கள் வருகிறார்கள். விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். 

A.G.ராமசந்திரன்.சமூக அர்வலர் அணூசோனன.

இங்குள்ள கோவில் வளாகங்கள் பழமை அடைந்துள்ளது. அதே போல

கட்டிடங்களும் பழமையடைந்துள்ளது. அவற்றை புதுப்பிக்க வேண்டும். இதற்காக

அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வஜ்ர நாதேஸ்வரர் தீர்த்த்திற்கு பஸ் வசதி செய்திட வேண்டும்.

B. S. Prakash. Reporter