தளி போலீஸ் ஸ்டேஷனில் ஆசிட் குடித்த விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள தேவகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா வயது 40 விவசாயி, நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயில் நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ரெட்டி வயசு 48 என்பவர் மண் அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது எதற்காக மண் எடுக்கிறாய் என ராஜா கேட்டதால் இருவருக்கும் இடையே தவறாக ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ராஜாவை ரமேஷ் ரெட்டி என தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராஜா தளி போலீசில் புகார் அளித்தார் இதன் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து நேற்று தளி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது கழிவறைக்கு செல்வதாக போலீஸ் சாரிடம் கூறிவிட்டு சென்ற ரமேஷ் ரெட்டி கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். அதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகின்றனர் விசாரணையில் பயத்தில் ரமேஷ் ரெட்டி ஆசிட் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.