தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்து சென்ற யானைகள்

 தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்து சென்ற யானைகள்


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வன சரக்கத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தும், கிராம மக்களை அச்சுறுத்தியும் வந்ததால் அவற்றை ஜவுளகிரி வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் நேற்று மாலை ஆலஹள்ளி  காப்புக் காட்டிலிருந்து 6 யானைகளை  வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது 4 யானைகள் மற்றும் 2 யானைகள் தனித்தனியாக பிரிந்து தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரகட்டn கிராமத்தில் சாலையை கடந்தன அதனால் அவ்வழியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கோன் பள்ளம் வனப் பகுதியில்  இடம் பெயர்ந்துள்ளன அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Thally Reporter. B. S. Prakash