மு. க. ஸ்டாலின் ஆல் நரிக்குறவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா; அல்வா கொடுக்கும் அரசு அதிகாரிகள்.....

மு. க. ஸ்டாலின் ஆல் நரிக்குறவர்களுக்கு கொடுக்கப்பட்ட  பட்டா;  அல்வா கொடுக்கும் அரசு அதிகாரிகள்.....

 ஸ்டாலின் அவர்களால்  72 நரிக்குறவர் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா,புறம்போக்கு என கூறும் அதிகாரிகள்: மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி ஊராட்சியில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக பதவி வகித்தபோது 72 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனையில் அரசாங்கமே வீடுகள் கட்டி பட்டாக்கள் வழங்கப்பட்டன

20 ஆண்டுகளை கடந்தநிலையில், நரிக்குறவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் செல்லாது  என்று கூறும்  அதிகாரிகள், அனாதினம் புறம்போக்காவே உள்ளது என்கின்றனர்..

20 ஆண்டுகளாக வசிக்கும் இந்த பகுதியில் அரசின் தொகுப்பு வீடுகள்,புணரமைப்பு, வங்கி கடன் என எந்த உதவிகள் கிடைக்காமல் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் செய்வதறியாமல் தவிக்கின்றனர்..

இன்று 100 குடும்பங்களாக வளர்ந்துள்ள இவர்கள் இன்று, நூற்றுக்கும் மேற்ப்பட்டோருடன்

மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட பட்டா செல்லாது என்றால், முதல்வரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் செல்லத்தக்க பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

B. S. Prakash. Thally Reporter