அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் விடுமுறை நீட்டிப்பு.... தனியார் பள்ளிகளுக்கு இல்லை....!
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
காலாண்டு விடுமுறை முடித்து 6 ஆறாம் தேதி பள்ளிகளை திறப்போம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
காலாண்டு தேர்வு முடித்து வருகிற 06.10.2022 ஆறாம் தேதி பள்ளிகளை திறந்து வழக்கம் போல் பாடங்களை நடத்துவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.
அரசு பள்ளி ஆசிரியர் களுக்குத்தான் எண்ணும் எழுத்தும் பயிற்சியை அரசு வழங்குகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அல்ல..
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை உடனடியாக முடித்தாக வேண்டும்..
அடுத்து மழைக்காலமும் வெயில் காலமும் வரும்.
விடுமுறையே வாழ்க்கை ஆனால் பள்ளிகளை நடத்த முடியாது. பாடங்களை முடிக்க முடியாது.
அரை மாதம் விடுமுறை விட்டு முழு மாதம் சம்பளம் தர முடியாத சூழ்நிலை..
தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..
எனவே அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் ஆறாம் தேதி பள்ளியை திறக்க தயாராவீர்...
பெற்றோர்களுக்கு தகவல் தருவோம் பள்ளிகளை திறப்போம்.
சுயநிதி பள்ளிகள் பள்ளி நடத்துவதில் பாடம் நடத்துவதில் அரசு தலையிட முடியாது என்பதை மறந்து விட வேண்டாம்..
அரசு பள்ளிகளே ஸ்பெஷல் கிளாஸ் என்று பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவார்கள்.
அப்பொழுது தனியார் பள்ளிகள் ஏமாந்து போவீர்கள்..
அரசுக்கு நமது மாநில சங்கம் கோரிக்கை மனுவை அனுப்பி இருக்கிறது.. ஊடகங்களிலும் நமது
உரிமைக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. கவலைப்பட வேண்டாம்..
பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் கோரிக்கைகள் யார் வைப்பார்கள்
நம் பள்ளிகளை பிள்ளைகளை காக்க நாம் என்றும் முன் கை எடுத்து நிற்போம்..
வெல்வோம்..என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்க மாநில செயலாளர்..K.R நந்தகுமார். தெரிவித்துள்ளார்.