திமுகவின் ஓசூர் மாநகர செயலாளராக S.A. சத்யா போட்டியின்றி தேர்வு...!

 திமுகவின் ஓசூர் மாநகர செயலாளராக S.A. சத்யா போட்டியின்றி தேர்வு...!

ஒசூர் மாநகராட்சியில் உள்ள 45வார்டுகளில் 4 பகுதிகளாக பிரித்து அண்மையில் பகுதி செயலாளர்கள் தேர்தல் முடிவடைந்த நிலையில்

ஒசூர் மாநகர செயலாளர் பதவிக்கான தேர்தல் , தளி சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

தேர்தல் அதிகாரியாக அந்நியூர் சிவா அவர்களை திமுக தலைமை நியமித்திருந்தது..

இந்தநிலையில் திமுகவின் ஒசூர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓசூர் மாநகர மேயர் திரு S.A.சத்யா அவர்கள் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்..

மேயரை தவிர்த்து வேறு யாரும் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிடாத நிலையில் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

Hosur Reporter. E.V. Palaniyappan