Coronaவால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்துவது யார்...? தமிழக அரசின் அறிக்கையில் குழப்பம்...!

Coronaவால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்துவது யார்...?  தமிழக அரசின் அறிக்கையில் குழப்பம்...!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க உள்ளதாக தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல கோடிக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே போன்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இழப்பீடு தொகை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தினருக்கு பேருதவியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

அதன்படி தற்போது இறப்பு விகிதமும் முழுவதுமாக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பெற்றோர் இருவருமே கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி படிப்புக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி படிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் படித்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனியார் பள்ளியில் பயிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு பேருதவியாக  இருக்கும்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு  Coronaவால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் இதற்கான கட்டணத்தை யார் கொடுப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அந்த மாணவர்களின் கல்வியை அதே பள்ளியில் தொடர வேண்டும் அது பாதிக்கப்படக்கூடாது என்று கூறியிருக்கிறதேதவிர அதை யார் தருவது எப்படி தருவது அதற்கான நடைமுறை என்ன என்பதைப் பற்றி தெளிவாக  விளக்காததால் தனியார் பள்ளி நிர்வாகிகள் குழப்ப மடைந்துள்ளனர்.

கொரோனாவால் தப்பித்து உயிர் பிழைத்தவர்களே  தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் செலுத்தாமல் அரசுப் பள்ளிகளிலும் மற்ற பள்ளிகளிலும் சேர்த்து விட்டார்கள்.  இந்த நிலையில் செத்துப்  போனவர்களின் பிள்ளைகள்  எத்தனை பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது  யாருக்கும் தெரியாத புதிர் கணக்கு...?!

இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள அறிவிப்பு என்பது போகாத ஊருக்கு போடப்படுகின்ற சாலை போன்றது.  பொதுவாக அரசு திட்டங்கள் எல்லாமே மக்களுக்கு நன்மை பயப்பதாக தெரியும் ஆனால்  அதனால் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை என்பது  சொற்பமாகவே இருக்கும்.  அதுபோல்தான் இந்த திட்டமும்.