நாட்டில் ஏன் நல்ல மழை பொழிகிறது தெரியுமா....

 நாட்டில் ஏன் நல்ல மழை பொழிகிறது தெரியுமா....?!


 இந்தியா முழுவதும் இப்போது நல்ல மழை பெய்து கொண்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள வற்றிப் போயிருந்த நதிகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடுகிறது.  சொட்டு நீருக்கு கூட வழி இல்லையே என்று தவித்து வந்த மக்கள்  பெருகிவரும் வெள்ளத்தைப் பார்த்து பெருமிதம் அடைகிறார்கள்.

எனக்குக் கூட ஆச்சர்யம்தான்.  எப்படி வந்தது இவ்வளவு மழை நீர் என்று.  எங்கள் ஊர் சின்னாறு அணை பத்து வருடங்களுக்கு மேலாக வற்றிப் போயிருந்தது.  எப்போது இந்த அணை நிரம்பும் என்று எல்லோரும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த மாதம் திடீரென்று அணை நிரம்பி விட்டது.  இதை பார்ப்பதற்கு பெருந்திறல் கூட்டம் தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறது.  நானும் அணையை பார்வையிட சென்றேன்.

அப்போது அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  இருபுறமும் இருந்த மலைகளில் மரங்கள் அனைத்தும் அடர்த்தியாக நன்றாக வளர்ந்துள்ளதே என்று கேட்டேன்.  அதற்கு அவர் அற்புதமான பதில் ஒன்றே தந்தார்.  இப்போதெல்லாம் அடுப்பு  எரிப்பதற்கு விறகிற்காக  மரங்களை வெட்ட யாரும் காட்டிற்குள் வருவதில்லை என்றார்.  ஏன் என்று கேட்டேன். அனைவருக்கும் தான் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். இது எவ்வளவு பெரிய ஆச்சரியமான உண்மை.  

இந்த நிலை இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் காணமுடிகிறது. நீங்கள் கூட நாடு முழுவதும் ஒருமுறை சுற்றிப் பாருங்கள்.  அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டாம்.  உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும், குன்றுகளையும், காடுகளையும் உற்று நோக்குங்கள்.  அங்கு எவ்வளவு மரங்கள் அடர்த்தியாக பசுமையாக வளர்ந்துள்ளது  என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.  

நான் பல ஊர்களில் பார்த்திருக்கிறேன்.  வெறும் குன்றுகளும் பாறைகளும் மட்டுமே கண்ணுக்கு தென்பட்டு வந்த நிலை இப்போது இல்லை.  அந்த மலைகளை எல்லாம் மறைத்துக்கொண்டு மரங்கள் வளர்ந்திருக்கிறது.  

இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீவிரமாக செயல்படுத்தி உள்ள உஜ்வாலா திட்டம், அனைவருக்கும் எரிவாயு இணைப்பு  அதுவும் ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு திட்டம்் கைகொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

முன்பெல்லாம் நல்ல வசதியானவர்களே எரிவாயு இணைப்பு பெற வேண்டுமென்று சொன்னால் ஏதாவது ஒரு எம்.பி. பரிந்துரைக்க வேண்டும்  என்ற நிலை இருந்தது.  இதை உடைத்தவர் அன்றைய பா.ஜ.க.வின் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள்.  அதை இப்போது விரிவுபடுத்தி அனைவருக்குமனதாக மாற்றியவர் பிரதமர் மோடி.

இந்த திட்டம் இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.   படித்தவர்களே கேஸ் அடுப்பை பற்ற வைக்க பதறிக் கொண்டு இருந்த நிலை மாற்றப்பட்டு  பாமர மக்களும் லைட்டரை பயன்படுத்தி அடுப்பு எரிக்கும்  நிலைக்கு இந்திய மக்கள் அனைவரும்  மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தான். 

 இப்போது விறகிற்காக மட்டுமல்ல தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கு கூட மரங்கள் வெட்டப்படுவது இல்லை என்பது  மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

 மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்று  இதுவரை நாம்  புத்தகங்களில்  படித்துள்ளோம் சில  விளம்பரங்களில் பார்த்துள்ளோம்.  அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை பார்க்கும்போது பூரிப்பாக இருக்கிறது.

இது எவ்வளவு பெரிய மாற்றம் எவ்வளவு பெரிய முன்னேற்றம் இதற்கு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும். அது நமக்கு வராது.

 நன்றி எல்லாம் வேண்டாம்.  மோடி ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பித்தலாட்ட பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஒரு பார்வர்ட் செய்யுங்கள் அது போதும்.

K. R. Ravichandran. M.A., 

Writer-Editor-Publisher