ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் ; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு!!!

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் ; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.8.2022 அன்று காலை 11 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு விதித்துள்ள கோவிட்-19 முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு 13.8.2022 முதல் 15.8.2022 வரை

 அனைத்து வீடுகளிலும் அரசு வழிகாட்டு நெல்முறைகளின் படி தேசியக்கொடி ஏற்றிட வேண்டும். தேசியக்கொடிகள் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் உள்ள மகளிர் சுய உதவி குழு மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, பொதுமக்கள் மேற்கண்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தேசியக் கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட தெரிவிக்கப்படுகிறது இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் பிளாஸ்டிக் தடை திட்டங்கள் மற்றும் நிதி குழு மாநிய நிதிப் பணிகள் ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு,நீர் வழிப்பாதை மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்11 கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறுகணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், (ஊரகம்) கல்வி உதவித்தொகை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு,மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இலக்கு,மக்கள் பட்டியலில் உள்ள ஏழை மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர்களை சேர்த்தல்,மற்றும் நீக்குதல்,பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)  பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, (PMJJBY), வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, ஊராட்சிகளுக்காண கட்டணங்களை இணைய வழியில் செலுத்துதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளபடியால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N அன்வர் அலி

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்