கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற பனைவிதை நடும் விழா: மாநகர மேயர் சத்யா தொடங்கி வைப்பு

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற பனைவிதை நடும் விழா: மாநகர மேயர் சத்யா தொடங்கி வைப்பு

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளையினர், தமிழகத்தின் பாரம்பரியமிக்க நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் பல நன்மைகளை அளிக்க கூடிய பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்..

ஒசூர் மாநகரில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட தேவையான உதவிகளை செய்து தருவதாக மாநகர மேயர் சத்யா அவர்கள் உறுதியளித்துள்ள நிலையில்

இதுவரை மாநகர பகுதியில் 15,000 மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகளை நட்டுள்ளனர்

இந்தநிலைநில் ஓசூர் மாநகராட்சி பேட்ரப்பள்ளியில் கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளை சார்பில் பனைவிதை நடும் விழா நடைப்பெற்றது

இதில் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய சத்யா அவர்கள் பங்கேற்று பனைவிதையை நட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்..

கரிசக்காட்டுப்பூவே அறக்கட்டளையினர் தெரிவிக்கையில் இன்று மற்றும் நாளை 2 நாட்களில் 20000 பனைவிதைகளை நட இலக்ககாக கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம்,  மோகன்,  மாநகர அவைத் தலைவர் கருணாநிதி, கழக நிர்வாகிகள் முனிகிருஷ்ணன், ரகு, முனிரத்தினம், ரகு, விஜய், சுரேஷ், சந்திரலேகா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Hosur Reporter. E.V. Palaniyappan