கூகுள் நிறுவனம் துவங்கும் புதிய பள்ளி.....?! அசத்தும் சுந்தர் பிச்சை....!

 கூகுள் நிறுவனம் துவங்கும் புதிய பள்ளி.....?! அசத்தும் சுந்தர் பிச்சை....!

சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ள இந்தியாவில் கூகுள் மிகவும் முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் சேவை மற்றும் எகோசிஸ்டத்தை மேம்படுத்தப் பல பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வர்த்தகச் சந்தையில் அடிமட்டத்தில் இருந்து தனது டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான பள்ளியை துவங்கியுள்ளது

கூகுள்

இந்தியாவில் தற்போது பெரு நகரங்களைக் காட்டிலும் சிறு நகரங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் கூகுள் நாட்டின் வர்த்தகப் போக்கை சரியாகப் புரிந்துகொண்டு நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இருக்கும் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட்அப் ஸ்கூல் தொடங்கப்படுவதாகக் கூகுள் இந்தியா புதன்கிழமை அறிவித்தது

கூகுள் ஸ்டார்ட்அப் ஸ்கூல்

ஸ்டார்ட்அப் ஸ்கூல் என்பது வளர்ந்து வரும் நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள் மற்றும் டெக்னாலஜி தொடர்பான டூல்ஸ், ப்ராடெக்ட்ஸ் மற்றும் அறிவைக் கொண்டு ஆரம்ப நிலை தொடக்க நிறுவனர்களைச் சித்தப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் பயிற்சிகள் கொண்ட தொடராகும்

பல பயிற்சிகள்

இந்தப் பள்ளியில் சேர்வோருக்கு ஒரு பயனுள்ள product strategy வடிவமைப்பது எப்படி, வாடிக்கையாளரை ஆழமான புரிந்துக்கொள்ளவது எப்படி, டிஜிட்டல் சந்தையில் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்குவது எப்படி, ஆவணங்களைத் தயாரிப்பது எப்படி என்பது போன்றஸ்ர விஷயங்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கூகுள் வழிகாட்டும்.

9 வாரம் பள்ளி

9 வாரம் கொண்ட இந்தத் திட்டத்தில் ஸ்டார்ட்அப் ஸ்கூல்-ல் சேர்வோர் கூகுள் அதிகாரிகளுடன் மட்டும் அல்லாமல் வெளியில் இருந்து பயிற்சி அளிப்பவர்கள் உடனும் ஆலோசனை செய்யும் வாய்ப்புப் பெறுவார்கள். கூகுள் D2C, B2B, B2C ஈகாமர்ஸ், மொழி, சோஷியல் மீடியா, நெட்வொர்கிங், ஜாப் சர்ச் பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது.

இந்தியா ஸ்டார்ட்அப் சந்தை

இந்தியாவில் சுமார் 70000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டு உலகிலேயே 3வது பெரிய ஸ்டார்ட்அப் சந்தையாக உள்ளது. இதேவேளையில் அடுத்தடுத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கூகுள் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், கூடுதலான நிறுவன வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகவும் கூகுள் ஸ்டார்ட்அப் ஸ்கூல் துவங்கியுள்ளது