மண் காப்போம் மனித வளம் காப்போம் என்கிற தலைப்பில் மினி மாரத்தான்.

 மண் காப்போம் மனித வளம் காப்போம் என்கிற தலைப்பில் மினி மாரத்தான்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் மனித வளம் காப்போம் என்கிற தலைப்பில்,  லயன்ஸ் கிளப் ஆப் ஓசூர் சிப்காட்,  என் எச் ஆர் டி ஒசூர் மற்றும் ஐ எம் ஏ  ஒசூர் இணைந்து  முதன் முறையாக நவின தொழில் துட்பத்துடன் மிக பிரமாண்டமான மினி மாரத்தானை இன்று காலை ஒசூரில்  நடத்தினார்கள்.

ஒசூர் ஒட்டல் ஹில்ஸில் வளாகத்தில் துவக்க விழாவுடன் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி சிப்காட் வழியாக சென்று மீண்டும் ஒட்டவில் வந்து நிறைவுற்றது.

4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 10 கி.மீ ஓட்டத்தில் ஆ / பெண் என 2 பிரிவுகளாகவும், 5 கி.மீ ஓட்டத்தில் ஆ/பெ என 2 பிரிவுகளாகவும் இந்த போட்டி நடைபெற்றது

மேலும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கலந்து கொள்ளும் விதமாக 5 கி.மீ நடையாக செல்ல ஏற்பாடு செய்யபட்டிருந்தது. 10 கி.மீ போட்டியில் ஆண் பிரிவில் 

முதல் பரிசான  ரூ 10 ஆயிரத்தை                   

இரண்டாவது பரிசான ரூ 7500 

மூன்றாம் பரிசு ரூ 5000 எனவும் 

பெண்கள் பிரிவில் 5 கி.மீ போட்டியில் ஆண் / பெண் 2 பிரிவில் 

முதல் பரிசு ரூ. 5000

2வது பரிசு ரூ 3000

3வது பரிசு ரூ 1500

எனவும் வழங்கப்பட்டது.

இந்த ஒசூர் உதவி காவல் ஆணையர் B.K அரவிந்த் IPS, ஒசூர் கோட்டாச்சியர் தேன் மொழி, ஒசூர் MLA ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா, ஒசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்