ஓசூரில் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து போராட்டம்

ஓசூரில்  பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து போராட்டம்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனின் விடுதலையை பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் வரவேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. பேரறிவாளனை விடுதலையை கண்டிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்த வேண்டும் என தலைமை அறிவித்தது.

அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பேரறிவாளனின் விடுதலையை கண்டித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒசூரில் காந்திசிலை முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் வாயில் வெள்ளைத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிவாளனின் விடுதலையை ஏற்கமுடியாது இதுபோன்ற விடுதலை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறிவிடும் எனவும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி இதில் மாவட்ட தலைவர் முரளிதரன்

INTUC  குப்புசாமி கீர்த்தி கணேசன் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்