தேவிபட்டினத்தில் ஐக்கிய சுன்னத்வல் ஜமாஅத் உள்ளிட்ட சமூக சேவா சங்கம் திறப்பு விழா

தேவிபட்டினத்தில் ஐக்கிய சுன்னத்வல் ஜமாஅத் உள்ளிட்ட சமூக சேவா சங்கம் திறப்பு விழா 


ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் ஐக்கிய சுன்னத்வல் ஜமாஅத் உள்ளிட்ட சமூக சேவா சங்கம் திறப்பு விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா புனித நபி பெருமானார் (ஸல்) பிறந்தநாள் பெருவிழா இன்று காலை சேது பொறியியல் கல்லூரி தாளாளரும் தேவிபட்டினம் ஐக்கிய சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் S.முஹம்மது ஜலீல் மரைக்காயர் தலைமையில் முதல் அமர்வு துவங்கியது. ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாக சபை செயலாளர் அல்ஹாஜ் A.H. பாபா முகைதீன் வரவேற்புரையாற்றினார். தேவிபட்டினம் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மற்றும் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் P.A.காஜா முயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் சிறப்புரையாற்றினார்முன்னதாகதேவிபட்டினம் சமூக சேவா சங்கத்தின் சிறப்பு மலரைநிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் S.முஹம்மது ஜலீல் மரைக்காயர் வெளியிட்டார்.

இரண்டாம் அமர்வாக  ஐக்கிய சுன்னத் வல் ஜமாஅத் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் S.முஹம்மது ஜலீல் மரைக்காயர் தலைமையில் புனித நபி பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெருவிழா அமர்வாக  தேவிபட்டினம் பெரியபள்ளிவாசல் செயலாளர் ஹாஜி பி.எம்.சித்திக் வரவேற்க, அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலைவகித்தார் கள்.இதில் தேவிபட்டினம்  பெரிய பள்ளிவாசல்தலைமை இமாம்மௌலவி முஹம்மது ரஹ்மத்துல்லா உலவி, தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். முகமது யாசின் மன்பயி, மேலப்பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் அஹமத் ஜெனி, காந்திநகர் மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளிவாசல் இமாம் மௌலவி K.அலாவுதீன் உமரி உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினார்கள்.இதனையடுத்து இளையான்குடி ரஷீதிய்யாஅரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி பி.முஹம்மதுராசுக்ஆலிம்மன்பஈ,ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர், தொண்டி, அல்அஜ்ஹரிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் உமரி ஆகியோர் நபிகள் நாயகத்தைப் பற்றி இனிமையாக, சிறப்பாக பேசினார்கள்.

தேவிபட்டினம் சமூக சேவா சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.தாதா ஹயாத்நன்றி உரை கூற நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெரியோர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி,N.A.ஜெரினா பானு