கவிப்பேரரசு வைரமுத்துவை கண்டுகொள்ளாத திமுக....! எம்.பி. பதவி கொடுத்து கௌரவிக்குமா....?

 கவிப்பேரரசு வைரமுத்துவை கண்டுகொள்ளாத திமுக....!   எம்.பி. பதவி கொடுத்து கௌரவிக்குமா....?

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சித் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2022 ஜூன் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் இன்னொரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.  கவிப்பேரரசு வைரமுத்து திமுக கரை வேட்டி கட்ட வில்லையே தவிர   கவிஞராக வளர்ந்தது  முதலே  திமுகவிற்கும் கலைஞர் குடும்பத்திற்கும் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார்.  

கலைஞருடன் இருந்த பலர் யார் யாரோ எங்கெங்கோ சென்று வந்தார்கள் ஆனால் கவிப்பேரரசு  வைரமுத்து மட்டும் இதுவரை கலைஞரை, திமுகவை விட்டு  விலகியது இல்லை இந்த இயக்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லைை. இப்படி உண்மையான தீவிர விசுவாசியாக இருக்கும் வைரமுத்துவிற்கு திமுக எந்த நன்மையும் செய்யவில்லை என்பது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் எம்ஜிஆரை ஜெயலலிதாவை புகழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் தகுந்த நேரத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் வலம்புரி ஜானுக்கும்,   ரபி பெர்னாட்டுக்கும்  ராஜ சபா எம்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளது.  அதுபோல் திமுகவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு முக்கிய பதவி வழங்க வேண்டும்.  அதுவும் ஜூன் மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று தமிழக கவிஞர்கள், எழுத்தாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்....?!