திமுக தலைமையிலான தமிழக அரசு ஆண்டு விழா

 திமுக தலைமையிலான தமிழக அரசு   ஆண்டு விழா


திமுக தலைமையிலான தமிழக அரசு   ஆண்டு விழா: ஓசூர் பேருந்து நிலையத்தில் திமுக மேயர் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததையடுத்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.

தேர்தல் வாக்குறுதிகளை ஓராண்டில் நிறைவேற்றுவதன் மூலம் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரூ.4000.

செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததன் நினைவு தினமான இன்று திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர பேருந்து நிலையம் ஓசூர் மாநகர திமுக பொறுப்பாளரும், மாண்புமிகு மேயருமான எஸ்.ஏ.சத்யா திமுகவினர் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

விழாவில், முதன்மை செயல் அலுவலர் சுகுமாறன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், வட்டார தலைவர்கள் கண்ணன், ரவி, பேரூராட்சி தலைவர் கருணாநிதி, நகர பொருளாளர் சென்னிரப்பா, ஈசி நாகராஜ், கவுன்சிலர்கள் மஞ்சுளா முனிராஜ், யாஷ்வினி மோகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E.V.பழனியப்பன்