புதுச்சேரி தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
புதுவையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தை ஒருங்கிணைத்து சட்டமன்ற உறுப்பினர் நமது சங்க தலைவருமான திரு. ரமேஷ் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் புதுவை சட்டமன்ற அலுவலகத்தில் புதுவை பள்ளிகளின் நிலை குறித்தும் கோரிக்கைகள் தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.
புதுவையில் புதிதாக தொடங்கிய கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவர் நீதியரசர்அக்பர்அலி அவர்களை சந்தித்துப் பேசி நியாயமான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கக் கோரியும் அனைவருக்கும் யாகம் தொடங்கியதும் இஎஸ்ஐ பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.இதற்கான தீர்வுகள் குறித்து அனைத்து பள்ளி நிர்வாகிகளிடம் குறைய சங்கத்தின் கீழ் உறுப்பினராக்கி மாபெரும் மாநில மாநாட்டை புதுவை முதல்வரை கொண்டு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் கே. ஆர். நந்தகுமார். ஓக்ரிட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்கூல் லட்சுமிபதி , சிவா, KSP மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ரமேஷ் எம்எல்ஏ, முத்தரையர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி முத்துராமன், கேலக்ஸி இங்கிலீஷ் ஹை ஸ்கூல் ரமேஷ் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண ஐஐஎஸ்க் சிவசுப்பிரமணி எஸ் எஸ் பி ஏ ஐயர் செகண்டரி ஸ்கூல் சங்கரன் அருணை ஸ்கூல் ஹை ஸ்கூல் ஸ்டார் இன்டர்நேஷனல் ஸ்கூல் ரவிசந்திரன் பேசிய போது எடுத்த படம்.