உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு கல்லூரி மாணவிகளுக்கு என தனி பேருந்து இயக்க வேண்டும்*_
_*உளுந்தூர்பேட்டையில் இருந்து அருகே உள்ள கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரிக்கு சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.*_
_*இவர்கள் காலை மற்றும் மதிய வேலை என இரண்டு ஷிப்ட்களில் பயின்று வரும் நிலையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக பேருந்து இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*_
_*காலை வேளையில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே பேருந்தில் பயணம் செய்வதால் பல இன்னல்களுக்கு மாணவிகள் ஆளாகின்றனர்*_
_*இதனை வெளியில் சொல்லமுடியாமல் கூனிக்குறுகி நிற்கும் சகோதரிகளுக்காக உளுந்தூர்பேட்டை பணிமனையில் இருந்து விருத்தாசலம் திற்கு கல்லூரி நேரத்தில் பெண்களுக்கு தனி பேருந்து இயக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வரப் பெற்றுள்ளன*_
_*இதனை நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் ஏனைய அரசு பொறுப்பு அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*_
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்: ஜி. முருகன்