ஒசூரில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திமுக தொண்டர்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா

 ஒசூரில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திமுக தொண்டர்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா


ஒசூரில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திமுக தொண்டர்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழாவுக்கு வருகை தரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என ஒசூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

வரும் மே மாதம் 22 தேதி ஓசூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாம், திமுக தொண்டர்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா, பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் திமுகவில் இணையும் நிகழ்வு மற்றும் கழக கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுகவின் இளைஞரணி மாநில செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

ஓசூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  பார்த்த  கோட்டா  சீனிவாசன்  துணை அமைப்பாளர்  ராமு  முன்னிட்டு அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஓசூரில் நடந்த திமுக மேற்கு மாவட்ட ஒன்றிய, மாநகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இளைஞரணி அமைப்பினர் அதிக அளவில் பங்கேற்று விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

ஓசூர் செய்தியாளர்: E.V.பழனியப்பன்