முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டிடக்கலைத்துறை மாணவர்கள் சாதனை.

 முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டிடக்கலைத்துறை மாணவர்கள் சாதனை. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகிலுள்ள கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கட்டிடக் கலைத்துறை மாணவர்கள் நாகப்பட்டினம் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் மறு பிரபந்தங்களை வடிவமைக்கும் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு,புகைப்படம் எடுக்கும் போட்டியில் இரண்டாம் பரிசு, ஆடை அலங்கார வடிவமைப்பு முக அமைப்பு,போன்ற இதர போட்டிகளில் பங்கேற்று சிறந்த கல்லூரிக்கான பரிசுக் கோப்பையை பெற்றுள்ளனர். 

பல பரிசுகளை வென்ற முகமது சதக் பொறியியல் கல்லூரி சிறந்த கட்டிடக்கலை துறை மாணவர்களை முகமது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் P. R.L.ஹாமீது இப்றாகிம்,கல்லூரி முதல்வர் முனைவர் முகமது ஷெரீப், துணை முதல்வர் முனைவர் செந்தில்குமார், அனைத்து கல்லூரியின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி முனைவர் விஜயகுமார், கல்லூரியின் கட்டிடக்கலைத் துறை தலைவி அறிவு மணி மற்றும் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளை வெகுவாகப் பாராட்டினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு