வேப்பனப்பள்ளி தொகுதியில் 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பூமி பூஜை

 வேப்பனப்பள்ளி தொகுதியில்  18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு  கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பூமி பூஜை 

வேப்பனப்பள்ளி தொகுதியில் சுமார் 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேகலசின்னப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோதிகுட்லபப்பள்ளி பகுதியில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் மற்றும் பையப்பசெட்டி புதூர் கிராமத்தில் 3 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கும், பெரியக்கோட்டபள்ளி ஊராட்சி போத்திநாயனபள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 9.5 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடத்திற்கான கட்டிட பணிகளை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி இன்று பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா ஆஜீ, ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதாசரவணன், ஊராட்சி தலைவர் சரவணன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன் சோக்கா டிராஜன் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர்: மூர்த்தி