ஜூன் 13 பள்ளிகள் திறப்பு: நமது சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...! வெற்றி...!! வெற்றி...!!!

 ஜூன் 13 பள்ளிகள் திறப்பு: நமது சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...! வெற்றி...!! வெற்றி...!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது....நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அனைத்து வகை பள்ளிகளையும்  ஜூன் மதம்  13ஆம் தேதியே பள்ளிகள் திறக்க இன்று ஆணை வெளியிட்டுள்ளது..

நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றியுள்ள  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் பள்ளி கல்வித் துறைக்கும் எமது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 அதேபோல் அனைவருக்கும் உடனடிமூன்றாண்டு தொடர்  அங்கீகாரம்,,

அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்,

அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி கட்டணம்,

2011 க்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ, எல் பி ஏ கட்டிட அனுமதி கேட்க வேண்டாம் எனும் உயர்நீதிமன்ற  அரசாணையை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர்.நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.