எட்டு லட்சம் மதிப்பிலான அரசு பள்ளி புத்தகங்கள் அபேஸ், இரண்டு பேர் சஸ்பெண்ட், போலீசில் புகார்

எட்டு லட்சம் மதிப்பிலான அரசு பள்ளி புத்தகங்கள் அபேஸ், இரண்டு பேர் சஸ்பெண்ட், போலீசில் புகார்    

                                                                 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, சுமார் 12 ஆயிரம் புத்தகங்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து, ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அரசு பள்ளி பாட புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.அதில் தங்கவேல்,43, உதவியாளர். திருநாவுக்கரசு,39, கிளர்க் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில்,நேற்று மாவட்ட கல்வி அலுவலர் மத்தூர் மணிமேகலை, முன்பு பணியாற்றிய பரூகூர் வட்டார கல்வி அலுவலர் மாதேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எங்கே போனது.என துருவித் துருவி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி