மாவட்ட நகர் ஊரமைப்பு துறை சார்பாக ஓசூர் முழுமை திட்ட கருத்து கேட்புக் கூட்டம்

மாவட்ட நகர் ஊரமைப்பு துறை சார்பாக ஓசூர் முழுமை திட்ட கருத்து கேட்புக் கூட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிளாரஸ்டா ஓட்டலில் மாவட்ட நகர் ஊரமைப்பு துறை சார்பாக ஓசூர் முழுமை திட்ட கருத்து கேட்புக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(9.4.2022) நடைபெற்றது.

ஓசூர் முழுமை திட்டத்தின் மூலம் ஓசூர் மாநகராட்சி எல்லை விரவாக்கத்தின் போது பொது மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சாலை விரிவாக்கம், மின்சார வசதி, பாதாள சாக்கடை திட்டம், பேருந்து வசதிகள், மருத்துவ உதவிகள், பள்ளி, கல்லூரிகள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை தூர்வாரியும், ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு இடையே தண்ணீர் செல்வதற்கு இணைப்பு கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், குடியிருப்புகள் கட்டுவதற்கும் ஏதுவான இடங்கள் கண்டறிய பட்டு அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளாரஸ்டா ஓட்டலில் மாவட்ட நகர் ஊரமைப்பு துறை சார்பாக ஓசூர் முழுமை திட்ட கருத்து கேட்புக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் திரு.எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப, அவர்கள், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.எ.சத்யா, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று(9.4.2022) நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளின் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒசூரில் நகர்ப்புற வளர்ச்சி குழும அலுவலகம் ஒசூரில் விரைவில் கட்டப்படும். இந்த சட்டத்தின் கீழ் தெருக்கள் நேராக இருக்கும் வகையில் அமைக்கப்படும். அப்பொழுது வீடுகள் இடிக்கப்பட்டால் வீட்டின் உரிமையாகளர்களுக்கு உரிய ஈழப்பீடு வழங்கப்படும். ஓசூர் மாநகராட்சி 734 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஒசூர் மாநகராட்சியுடன், 120 வருவாய் கிராமங்கள், கெலமங்கலம் பேரூராட்சி ஆகியவை இணைக்கப்படும். இது குறித்து பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வளர்கள், பல்வேறு சங்க பிரதிநிதிகள், விவசாயகளிடம் கருத்துகள் கேட்டறிந்து முழுமையான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

அதுவரை ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தில் மனை பிரவுகள் அப்ரூவல் தடையில்லாமல் வழங்கப்படும். ஓசூரில் வீட்டு வசதி வாரியம் இனி விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வாங்காது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தி வீடுகளை கட்டி கொடுத்தது. தவனை முறையிலும், சுயநிதி திட்டத்தின் கீழ்

வீடுகளை கட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்தது. இன்னும் 2 மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் இந்த மாஸ்டர் பிளான் முழுமையடையும். தமிழக அரசு மக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்து அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தவே முடிவு செய்துள்ளது. மேலும்,ஓசூர் மாநகராட்சி எல்லை விரவாக்கத்தின் போது பொது மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சாலை விரிவாக்கம், மின்சார வசதி, பாதாள சாக்கடை திட்டம், பேருந்து வசதிகள், மருத்துவ உதவிகள், பள்ளி, கல்லூரிகள் அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை தூர்வாரியும், ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு இடையே தண்ணீர் செல்வதற்கு இணைப்பு கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், குடியிருப்புகள் கட்டுவதற்கும் ஏதுவான இடங்கள் கண்டறிய பட்டு அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும் என வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஓசூர் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகள், சிறு குறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஓசூர் பில்டர்ஸ் அசோசியேஷன் பிரதிநிதிகள், ஓசூர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து புனுகன் தொட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், எழில் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய திட்டப்பகுதி-2-ல் 2013-14 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயனாளிகள் பயன்ப்படுத்தப்படும் வீடுகளின் நிலை குறித்தும்,அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி வட்டம் பில்லணகுப்பம் கிராமத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்கு மாடி குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் இணை இயக்குநர்கள் திரு.முருகன், திரு.சிவபிரகாசம், துணை இயக்குநர் ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமம் திரு.சண்முகம், ஓசூர் மாநகராட்சி ஆணையர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேமபாட்டு வாரிய தலைமை பொறியாளர் திரு.ராஜசேகரன், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, துணை மேயர் திரு.ஆனந்தையா, மாவட்ட சுற்றுசுழல் செயற்பொறியாளர் திரு.செந்தில் குமார், துணை இயக்குநர் (கனிம வளம்) திரு.வேடியப்பன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவலிங்கம், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் திரு.மனோகரன், சிப்காட் மேலாளர் திரு.வெங்கடேசன், வட்டாட்சியர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள கலந்துக்கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்:E.V. பழனியப்பா


Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்