டயர்ல காத்து கம்மியா இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?

டயர்ல காத்து கம்மியா இருந்தா  என்ன நடக்கும் தெரியுமா?

வாகனத்தின் டயர்களில் காற்றின் அளவை சரியான அளவில் பராமரிப்பது மிகவும் முக்கியம். டயர்களில் காற்றின் அளவு மிகவும் குறைவாகவும் இருக்க கூடாது. மிகவும் அதிகமாகவும் இருக்க கூடாது. டயர்களில் பல்வேறு காரணங்களால் காற்றின் அளவு குறையலாம். அப்படி காற்றின் அளவு குறைவாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஆனால் ஒரு சிலருக்கு இந்த பிரச்னைகள் பற்றி தெரிவதில்லை. அவர்கள் தொடர்ந்து குறைவான காற்றுடன், வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே வாகனத்தின் டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருந்தால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதை படித்த பின், டயர்களில் காற்றின் அளவை சரியாக பராமரிப்பீர்கள்.

டயர்களில் காற்றின் அளவு குறைவாக இருந்தால், மைலேஜ் பாதிக்கப்படும் என்பதுதான் முதல் பிரச்னை. காற்றின் அளவு குறைவாக இருக்கும்பட்சத்தில், உங்கள் வாகனம் வழக்கமாக வழங்கும் மைலேஜை காட்டிலும், மிகவும் குறைவாகவே வழங்கும். இதன் காரணமாக எரிபொருளுக்காக அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும்.

 மைலேஜ் மட்டுமல்லாது, வாகனத்தின் கையாளுமை மற்றும் செயல்திறன் ஆகியவையும் சேர்ந்தே பாதிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆனால் டயர்களில் காற்றின் அளவு சரியாக இருந்தால், மைலேஜ், செயல்திறன், கையாளுமை என அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

, டயர்களின் ஆயுட்காலம் 25 சதவீதம் வரை குறைந்து விடும். எனவே நீங்கள் அடிக்கடி டயர்களை மாற்ற வேண்டியதிருக்கும். டயர்களை மாற்ற அதிகமாக செலவாகும் என்பது அனைவருக்குமே தெரியும். இரு சக்கர வாகனங்களுக்கே ஒரு டயருக்கு தோராயமாக 1,500-2,000 ரூபாய் வரையில் செலவாகும். எனவே டயர்களில் காற்றின் அளவை சரியாக பராமரிப்பதே சிறந்தது.

டயர்களில் காற்றின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் வாகனம் நிற்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதாவது நீங்கள் பிரேக் பிடித்தவுடன் வாகனத்தை நிறுத்த இயலாது. அத்துடன் காற்றின் அளவு குறைவாக உள்ள டயர்கள் 'ஸ்கிட்' (Skid) ஆவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறிப்பாக ஈரமான சாலைகளில் செல்லும்போது, காற்றின் அளவு குறைவாக இருந்தால், டயர்கள் 'ஸ்கிட்' ஆகலாம். மழைக்காலங்கள் என்றால், சாலைகள் அதிக ஈரமாக இருக்கும். எனவே மழைக்காலங்களில் கூடுதல் கவனமாக இருப்பது உங்களுக்கும், உங்களுடன் வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும்.

 அதாவது காற்றின் அளவு சரியாக இல்லாவிட்டால், டயர்களின் சாலை உடனான தொடர்பு அதிகரிக்கும்.

டயர்கள் சாலையில் அதிகமாக தேயும் நிலை ஏற்படும் என்றும் கூட சொல்லலாம். அதிக உராய்வு மற்றும் வெப்பம் ஆகியவற்றுக்கு இது வழிவகுத்து விடும். இந்த அதிகப்படியான வெப்பம், டயர் வெடிப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம். இதனால் வாகனம் விபத்தில் சிக்கலாம். 

இது மிகவும் ஆபத்தானது என்பதால், உங்கள் வாகனத்தின் டயர்களில் காற்றின் அளவு சரியாக உள்ளதா? என்பதை பரிசோதித்து கொள்வது சிறந்தது.

 நீங்கள் இதை செய்து விட்டால், உங்கள் வாகனம் சிறப்பான மைலேஜை வழங்கும். தற்போது பெட்ரோல், டீசல் விற்பனையாகும் விலையை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு சொட்டு எரிபொருளுமே நமக்கு மிகவும் முக்கியமானதுதான்.

எரிபொருளுக்காக செலவிடும் தொகையை குறைப்பதுடன், அடிக்கடி டயர்களை மாற்ற வேண்டியதற்காக செய்ய வேண்டிய செலவையும் சேர்த்தே குறைக்க வேண்டுமென்றால், டயர்களில் காற்றின் அளவை மிக சரியான அளவில் பராமரிக்க வேண்டும். மேலும் டயர்களில் காற்றின் அளவு சரியாக இருந்தால், உங்கள் வாகனத்திடம் இருந்து சிறப்பான செயல்திறன், கையாளுமை ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம்.