பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்புகிராமசபை கூட்டம்

 பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்புகிராமசபை கூட்டம்

கிருஷ்ணகிரி அருகே பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்புகிராமசபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு .கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைமற்றும் மத்திய அரசின் கிசான் அட்டை ஆகியவற்றை குறித்து பயன்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக அரசின் ஆணைக்கிணங்க இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333- கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி அருகே பெத்தாளாபள்ளி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்திற்குஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி வெங்கடேசன்.தலைமை வகித்தார்.இதில் வேளாண்துறை சுகாதாரத்துறை கிராம நிர்வாக அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்மீண்டும் க கொரோனோ நோய் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வை சுகாதாரத் துறை அலுவலர்கள் ஏற்படுத்தினர்.

சிறப்பாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

வேளாண்மைத்துறை சார்பில் மத்திய அரசின் கிசான் கார்டு திட்டத்தை குறித்து விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இதேபோல் திப்பணபள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன். தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்

மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படுத்தித்தரும் வசதிகள் மற்றும் கடன்கள் ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

இதேபோல் கட்டிகணபள்ளி பஞ்சாயத்து சார்பில் புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்குஉதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை  சார்பில் அலுவலர் சென்னகேசவன் விளக்க உரை ஆற்றினார்

குழந்தைகளுக்கு வளர்ச்சிப் பருவத்தில் கொடுக்க வேண்டிய ஊட்டச் சத்து உணவுகள் குறித்துகஸ்தூரி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் மூர்த்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி