தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக மாநில கல்வி கொள்கை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு...!

தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக மாநில கல்வி கொள்கை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு...!


தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 இத்தனை ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி வடிவமைத்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் மிகப்பெரிய வரப்பிரசாதம்.. கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதிவடிவம் பெற்று இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.  

 இதில்   இல்லாததா மு.க. ஸ்டாலின் உருவாக்கும் மாநில கல்வி கொள்கையில் அமைந்துவிட போகிறது என்கிற கருத்து பரவலாகவும் ஆழமாகவும் பதிந்து வருகிறது.

தமிழக அரசு வடிவமைக்கும் மாநில கல்விக் கொள்கைக்கு ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதற்கு ஓராண்டு தேவையே இல்லை.  

இவ்வளவு பெரிய அதிபுத்திசாலிகள் கொண்ட குழுவும் தேவையில்லை.  ஒரே ஒரு நாள் போதும் தமிழகத்திற்கான புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பதற்கு.

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடித்த சாட்டை, அப்பா,   மற்றும் பசங்க, பசங்க 2,  அம்மா கணக்கு,  இளைய தளபதி நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படங்களை பார்த்தாலே தமிழகத்தின் கல்வி நிலை எப்படி இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். 

 இந்த கல்விக் கொள்கைகளை மாற்றுவதற்கான வழிகளும் இந்த திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது.
 
 இதை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும். கவனத்தில் எடுத்துக் கொண்டால் தமிழகத்தின் கல்வி கொள்கை அகிலம் போற்றும் வகையில் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.