ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பாஸ்கர் மோசடி; கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பாஸ்கர் மோசடி; கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு புதுக்காலனி கண்டியபெரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச பட்டா ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் பாஸ்கர் மோசடியில் ஈடுபட்டு பணம் வாங்கிக் கொண்டு வசதி படைத்தவர்களுக்கு பட்டா வழங்கியதில் முறைகேடு.அவர்களை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரியப்ப பாண்டியன். நிறுவன தலைவர்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் தமிழ் நாடு.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுச் செயலாளர் பாலமுருகன் தென் மண்டல அமைப்புச் செயலாளர் முத்துக்கருப்பன் வழக்கறிஞர் பிரபு ஜீவன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தர்மராஜ் பாளை ஒன்றிய செயலாளர் பேச்சுபாண்டியன் மானூர் நவநீதன் அரசு புது காலனி கணேசன் சிவாஜி நகர் பிச்சையா இராமையன்பட்டி உசேன்டவுன்  பாலசுப்ரமணியன் தச்சநல்லூர் நகர செயலாளர்  மண்டல தலைவர் தங்கவேலு முத்துவேல் பாண்டியன் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்; இளையராஜா