விருதுநகர் பாலியல் வன்கொடுமையை கண்டித்து" புரட்சி பாரதம் கட்சி" கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் களக்காட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமை தாங்கினார் மாவட்ட மகளிரணி செயலாளர் P.ரேணுகா, மாவட்ட துணைச்செயலாளர் காவேரி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார்,களக்காடு ஒன்றிய செயலாளர் இன்பரசு,களக்காடு ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது காஸிர் வரவேற்புரையாற்றினார்.
விவசாய சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், திருவாடுதுறை ஆதீன குத்தகை விவசாயிகள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சங்க தலைவர்
டாக்டர்.பகத்சிங் முகமது, புதிய புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சுதாகரபாண்டியன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டத் தலைவர் K.S.சித்திக்,குறிஞ்சியர் சமூகநீதி பேரவையின் மாநில மகளிரணி தலைவி
இளவேயினி தங்கம், தமிழர் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளர்
லெனின் கென்னடி, தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் லெனின் முருகானந்தம்,
விவசாய சங்க தாலுகா செயலாளர் முருகன்,திராவிடத் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் திருக்குமரன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் நரேஷ் அம்பேத்கர்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தாவீது,கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்கம், ஆகியோர் கண்டன உரையாற்றினர் இதில் புரட்சி பாரதம் கட்சி ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மிக்கேல்,வள்ளியூர் ஒன்றிய செயலாளர் ராஜ், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் ரமேஷ், வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் இன்பராஜ், களக்காடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இளையராஜா, ராதாபுரம் நகர இளைஞரணி செயலாளர் பிரவின், களக்காடு நகர இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன்,களக்காடு நகரமகளிரணி செயலாளர் நாகரத்தினம்,இராதாபுரம் ஒன்றிய மகளிரணி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர் களக்காடு நகர செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் இளையராஜா