பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியை முன் மாதிரி கிராமமாக மாற்ற கலந்தாய்வுக் கூட்டம்

பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியை முன் மாதிரி கிராமமாக மாற்ற கலந்தாய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் தலைமையில்பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியை முன் மாதிரி கிராமமாக மாற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் ' சன்சாத் ஆதர்ஷ் கிராமயோஜனா'திட்டத்தின்கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு வருடமும் ஒரு ஊராட்சியைதத்தெடுத்து அதை மாதிரி கிராமமாக மாற்றும்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன்படி கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியகோட்டப்பள்ளி ஊராட்சியைமுன்மாதிரி கிராமமாக மாற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று பெரிய கோட்டபள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் தலைமை வகித்தார்.

உதவி திட்ட அலுவலர் தேவராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர். சாந்தி.ஊராட்சி மன்ற தலைவர் ஹீரோவின்  ஆகியோர் முன்னிலை வகித்தார்்.

கூட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற வகையில் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது இதையடுத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இடம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்.ஊர் பெரியவர்கள்ஆகியோரின் ஆலோசனைகளை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக் குமார் கேட்டறிந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் தெரிவிக்கையில் :

நாடாளுமன்ற உறுப்பினரும் அரசுத்துறை அதிகாரிகளும் என்னதான் முயற்சி செய்து முன்மாதிரி கிராமமாக மாற்ற முயற்சி செய்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் முன்மாதிரி கிராமமாக மாற்ற முடியாது எனவும் எனவே விவசாயிகள் படித்த இளைஞர்கள்.மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஆகியோர் தாங்கள் உயர்ந்த சிந்தனை வைத்துசெயல்பட வேண்டும் என தெரிவித்தார்.மக்கள் முன்னேறினால் கிராமம் முன்னேறும் கிராமம் முன்னேறினால் சமுதாயமே முன்னேறும் எனவும்.விவசாயத்திற்கு அடுத்து விவசாயிகளே உயிர் உரம் தயாரித்தல்.பெண்கள் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்களைஏற்றுமதி செய்தல்.அதேபோல் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் திறம்பட செயல்பட்டு குழந்தைகளை கல்வியில் முதல் நிலைக்கு கொண்டுவருதல்ஆகிய செயல்களில் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்.வேளாண்மை துறை.கல்வித்துறை.மின்சார வாரியம்.உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் பி.சேகர், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஏ. லலித் ஆண்டனி, சேவாதள மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில பேச்சாளர் நாஞ்ளில் ஜேசு துரைராஜ், மாவட்ட நிர்வாகி அக.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்; மூர்த்தி